சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில்  34 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்  ஜூன் 1ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக பல பகுதிகளில் மழை, வெள்ளம், சூறைக்காற்றுகளும் வீசியது.  குறிப்பாக  மேற்கு மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும்  நல்ல மழை பெய்தது. இதனால் சில இடங்களில் எதிர்பாராத விபத்து  காரணமாக பலர் உயிரிழந்துள்ள சோகமும் அரங்கேறின.

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  பருவமழை தொடர்பான பாதிப்புகளால் ஜூன் முதல் தேதியிலிருந்து செப்டம்பர் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்  180 கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது

மேலும், பருவமழை தாக்கத்தால்,  274 குடிசைகள் பகுதியளவிலும் 47 குடிசைகள் முழுமையாகவும் சேதமடைந்தது என்றும்,  122 வீடுகள் பகுதியளவிலும் 11 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.