சென்னை

ன்று முதல் சென்னையில் பொங்கலை முனிட்டு கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

 

வரும் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், அனைவரும் புத்தாடைகள் மற்றும் பொங்கலிட தேவையான பொருட்களை வாங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  மேலும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் தயாராகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வசதியாக 25 ஆயிரத்து 752 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் பேருந்து, ரயில் முனையங்களுக்கு வசதியாக செல்லவும் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) 13-ம் தேதி வரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு இணைப்பு பேருந்துகள் கோயம்பேடு பேருந்து  நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து  நிலையம் ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்பட் உள்ளன.