தமிழ்நாட்டில் ரூ. 17,111 கோடி மதிப்பிலான 32 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்த காலத்தில் அட்டவணைக்குள் முடியாமல் உள்ளது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ஆறு/நான்கு வழிச்சாலை, கிரேடு பிரிப்பான்கள் மற்றும் மேம்பாலம் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் அதன் கால அட்டவணை குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.

அதில், 985 கி.மீ. தூரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் காலதாமாகி வருவதாக பட்டியலிட்டுள்ளார். தாமதமாகும் திட்டங்களின் அசல் செலவு ரூ. 17,112 கோடி என்றும் திட்டம் செயல்படுத்தப்படும் இடம் மற்றும் திட்டம் தொடர்பான பிற காரணிகள் காரணமாக திட்ட மதிப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் திட்டத்தின் இறுதி முடிவில்தான் உண்மையான செலவு அதிகரிப்பு தெரியும் என்றும் அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் 2018 முதல் 2022 வரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் முதலில் ஒரு வருடம் முதல் 30 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.

உதாரணமாக, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 34 கிமீ தூரம் வரை தேசிய நெடுஞ்சாலை NH-48-ன் காரைப்பேட்டை வரையிலும், காரைப்பேட்டை முதல் NH-48-ன் வாலாஜாபேட்டை வரையிலும் ஆறு வழிச்சாலை 2019 பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் வழங்கப்பட்டது. ரூ. 1595 கோடி செலவில் 2021 ஆம் ஆண்டில் 24 மாதங்களில் இத்திட்டம் முடிக்க திட்டமிடப்பட்டது. .

இதேபோல், சட்டநாதபுரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரையிலான NH-32 இன் 55.8 கிமீ தூரம் நான்கு வழிச்சாலை 2020 அக்டோபரில் வழங்கப்பட்டது அதன் திட்ட மதிப்பு ரூ 1872 கோடி.

தவிர, விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப் பகுதி என்.எச்-45சி, சேத்தியாத்தோப்பு – சோழபுரம் பகுதி என்எச்-45சி, சோழபுரம் – தஞ்சாவூர் பகுதி என்எச்-45சி, செட்டிகுளம் – நத்தம் பிரிவு நான்கு வழிச்சாலை ஆகியவை அடங்கும். , வாடிப்பட்டி – தாமரைப்பட்டி பிரிவு (மதுரை ரிங் ரோடு) நான்கு வழிச்சாலை மற்றும் கமலாபுரம் – ஒட்டன்சத்திரம் பிரிவு நான்கு வழிச்சாலை ஆகியவையும் காலதாமாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வழியும் நிலம் கையகப்படுத்துதல், வனத்துறை அனுமதி, கடன் வாங்க அனுமதி கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்திட்டம் தாமதமாவதாகவும், பணிகளை சரியான நேரத்தில் முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக NHAI அதிகாரிகள் தெரிவித்தனர்.