சென்னை: தமிழகத்தில் இன்று  32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  3ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும்  காவல்துறை உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்து வருகின்றனர்.  அதன்படி காவல்துறையினரும் பணி மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்தும், 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக திருநாவுக்கரசு, சென்னை புலனாய் குருவித்துறை காவல் கண்காணிப்பாளராக ஆர்.ராமகிருஷ் ணன், தெற்கு போக்குவரத்துக் காவல் துணை ஆணையராக வண்டி கங்காதர், தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் காவல் கண்காணிப்பாளராக மேகலீனா ஜடன் உள்ளிட்டோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.