வாஷிங்டன்:
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவை சின்னாப்பின்னமாகி வருகிறது. அங்கு நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
கடந்த 24மணி நேரத்தில் 3176 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை
50,243 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவின் ஆட்டம் சர்வசேத அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், அனைத்துக்கும் டேக்கா கொடுத்துவிட்டு, தனது வீரியத்தை அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள போதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,90,654-ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 7 வட்சத்தை தாண்டி உள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலக வல்லரசான அமெரிக்காவில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தி வருகிறது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8லட்சத்து 90ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் 9 லட்சத்தை நெருங்க உள்ளது.
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்து 372 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3176 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 82ஆயிரத்து 843 பேர் குணமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பலி எண்ணிக்கையில் அமெரிக்காவை அடுத்து 2வது இடத்தில் இத்தாலி உள்ளது. அங்கு 25,549 பேர் கொனாவால் உயிரிழந்து உள்ளனர்.
3வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. அங்கு 22,157 பேரும்ம, பிரான்சில் 21,856 பேர், ஜெர்மனியில் 5,575 பேர், பிரிட்டனில் 18,738 பேர், துருக்கியில் 2,491 பேர், இரானில் 5,481 பேர், சீனாவில் 4,632 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.