சென்னை:
சென்னை மெட்ரோ ரெயிலில் நேற்று ஒரே நாளில் மட்டும் 31 ஆயிரத்து 500 பேர் பயணம் செய்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 7ம் தேதி 26 ஆயிரத்து 200 பேரும், 8 ம் தேதி 31 ஆயிரத்து 500 பேரும் பயணம் செய்துள்ளனர். இதற்கு முன்னர் சராசரியாக தினமும் 20 ஆயிரம் பேர் வரை மட்டுமே பயணம் செய்து வந்தனர்.
Patrikai.com official YouTube Channel