டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,231 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 45 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 7,231 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 64,667 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.15 சதவீதமாக உள்ளது
மேலும் 45 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 5,27,874 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.
கொரோனாவிலிருந்து மேலும் 10,828 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,38,35,852 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.66 சதவீதமாக உள்ளது
நாட்டில் இதுவரை 2,12,39,92,816 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 22,50,854 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]