டில்லி,

கில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கமான ஏஐசிடிஇ நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகளை மூட அறிவுறுத்தி உள்ளது.

இந்த பட்டியலில் தமிழகத்தில் 31 கல்லூரிகள் மூடப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 31 கல்லூரிகள் மூடப்பட இருக்கிறது.

ஏஐசிடிஇ அறிவித்துள்ள  800 பொறியியல் கல்லூரிகளில் எந்தவொரு மாணவரும் சேராத நிலையில், அந்த கல்லூரிகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஏஐசிடியு  தலைவர் அணில் தத்தாதியா கூறி உள்ளார்..

ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ-ன் விதிகளால் 150 கல்லூரிகள் வரை மூடப்பட்டு வருகிறது. மேலும் 30 சதவிதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகளையும் மூட அறிவுறுத்தப்படுகிறது.

ஏஐசிடிஇ இணையதளத்தில் உள்ள விவரங்களின் படி 2014 ம்னுதல் 2017 வரையில் மட்டும் 410 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் 2016-2017ம் கல்வி ஆண்டில்தான் அதிகப்படியான கல்லூரிகள் மூடப்பட இருக்கின்றன.

மாநிலம் வாரியாக மூடப்பட உள்ள கல்லூரிகள் விவரம்:

தமிழகம் -31, கர்நாடகா -21, தெலுங்கானா-64, ஆந்திரா-29

மகாராஷ்டிரா-59. உ.பி.,-47. அரியானா -31. ராஜஸ்தான்-30. குஜராத்-29. மத்திய பிரதேசம-21. பஞ்சாப்-19.