சென்னை
ஆயுதபூஜைக்காக சொந்த ஊர் செல்ல கடந்த இரு நாட்களில் பேருந்துகளில் 30000 பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர்.

வருகிற 11 ஆம் தேதிஆயுத பூஜையும், வருகிற 12 ஆம்தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. இந்த விடுமுறை காலத்தில் எராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாலும்
எனவே தமிழகம் முழுவதும் 1,715 சிறப்பு பஸ்களை இயக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பயணிக்க இன்றும் நாளையும் பேருந்துகளில் பயண செய்ய சுமார் 30000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்
இதில் இன்று 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நாளை (வியாழக்கிழமை) 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என 2 நாட்களில் பயணம் செய்ய மொத்தமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
[youtube-feed feed=1]