டில்லி,
வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளதால் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. தென் மாவட்டங்களில் குறைவான அளவிலேயே பனிப்பொழிவு உள்ளது. ஆனால்,வட மாநிலங்களில் கடுமையாக பனிப்பொழிவு நிகழ்கிறது.
இதன் காரணமாக பனிமூட்டம் காலை 11 மணி வரை நீடிப்பதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. அதுபோல ரெயில் தண்டவாளங்கள் சரியாக தெரியாத நிலையில் ரெயில் போக்குவரத்தும், விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3000 ரெயில்கள் தாமதமாக சென்றுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஹ் கோயல் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ரெயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், கடந்த மாதம் முதல், நாடு முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து, கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 21-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 3,119 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பல ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வட மாநிலங்களில் நிலவிய பனிப்பொழிவால் மெயில் மற்றும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன.
பனிப்பொழிவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ரயில் டிரைவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.