மதுரை: ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை,  துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் துணையுடன் 300பேருக்கு போலி பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக முன்ஜாமின் கோரியவர்களின் மனுக்களை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

தேனியை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  வைரம் என்ற ராஜா கேட்டுக் கொண்ட தால் திம்மராசநாயக்கனூரில் சொத்து வாங்கியதாகவும், அந்த நிலம் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடம் என்பது பின்னர் தெரிய வந்ததாகவும், ஆனால், துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் துணையுடன் போலி பட்டா தயாரித்து தனக்கு வழங்கி உள்ளது தெரியவந்தது.  இதுதொடர்பாக ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புரோக்கர் வைரம் என்ற ராஜா என்பவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அவரது உதவியிடன்  ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் 300 பேரிடம் பணம் வசூலித்து 300 போலி பட்டாக்கள் வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புரோக்கர் வைரம் ராஜா  தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வவாங்கியுள்ளது உயர்நீதிமன்ற விசாரணையின்போது தெரிய வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.தாரணி, மனுதாரர் மீது 4 வழக்குகள் உள்ளன. அவர் 300 போலி பட்டாக்கள் வழங்கியுள்ளார். ரூ.73.40 லட்சம் வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். நிலுவை வழக்கு விபரங்களை கீழ் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. எனவே வைரம் என்ற ராஜாவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. அவரை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். நீதிபதியின் உத்தரவு காரணமாக போலி பட்டா வழங்க உதவியாக இருந்த துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.