சென்னை: இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகை லாரி வாடகையை 30 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் முதல் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது உச்சத்தில் உள்ளது. இந் நிலையில், இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகை லாரி வாடகையை 30 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
லாரி வாடகை உயர்த்தப்படும் பட்சத்தில் காய்கறிகள், பழங்கள், அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சாமானிய மக்கள் மேலும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
எனவே மத்திய, மாநில அரசுகள் வாக்குகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்களின் நலனின் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.