சென்னை:
ட்சய திருதியை முன்னிட்டு தங்கம் 30% கூடுதல் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்சய திருதியை நாளான நேற்று தங்கம் விற்பனை களைகட்டியது. இந்த நாளில் தங்கம் வாங்கினால், மேலும் பெருகும் என்ற நம்பிக்கையால், பலரும் நகைக் கடைகளில் குவிந்தனர்.

சென்னை தியாகராய நகர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நகைக் கடைகளிலும் விற்பனை களைகட்டியது.

அட்சய திருதியை நாளில் எதிர்பார்த்ததைவிட கூடுதல் தங்கம் விற்பனை ஆகியுள்ளதாகவும், . சுமார் 18 டன் தங்கம் விற்பனையானதாக கூறிய வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டை விட 30 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து.