சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமேலும் 1021 பேருக்கு கொரோனா பாதிப்பு 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1172 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 1,24,055 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது.
இன்று ஒரே நாளில் மேலும் 1021 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,01,614 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் 11,685 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,097 ஆக அதிகரித்து உள்ளது. 29 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனையில் 05 பேரும், அரசு மருத்துவமனையில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து 1,172பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,53,832 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 120 பேரும், கோவையில் 116 பேரும் செங்கல்பட்டில் 85 பேரும் ஈரோட்டில் 76 பேரும், திருப்பூரில் 69 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.