சென்னை:
சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியல் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
சென்னையில் இதுவரை 13,362 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில்,  தற்போது 6300 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்களி. இவர்கள் நேற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 618 பேர். இதுவரை 6869 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். அதேவேளையில் கொரோனாவுக்கு 109 பேர் பலியாகியும் உள்ளனர்.
சென்னையில் உள்ள  15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து ராயபுரம்  மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு, பாதிப்பு எண்ணிக்கை 2,446 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,678 பேரும், திரு.வி.க. நகரில் 1,437 பேரும், தேனாம்பேட்டையில் 1,500 பேரும், தண்டையார்பேட்டையில் 1,425 பேரும் மற்றும் அண்ணா நகரில் 1143 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை 13362 ஆக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.