டெல்லி: ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த புதியநடவடிக்கை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி,

செயலற்ற வங்கிக்கணக்குகள்

2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள்,

நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள்  மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி மூலம் அபகரிப்பது செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து வரும் நிலையில், மற்றொருபுறம் டிஜிட்டல் மோசடிகளும்   அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி  வெளியிட்டு உள்ளது. இந்த புதிய நடைமுறைகள் இன்று ( 2025 ஜனவரி 1 – புதன்கிழமை) முதல் அமல்படுத்துகிறது.

அதன்படி,  3 வகையான வங்கிக்கணக்குகள் இன்று முதல் மூடப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்குகள் இந்த ரகத்தை சேர்ந்தவையா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. முதலில் வருவது செயலற்ற வங்கிக்கணக்குகள்,  நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் , தொடர்ந்து 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எந்த பரிமாற்றமும் நடக்காத வங்கிக்கணக்குகள் ஆகியவற்றை மூட நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இதுபோன்ற வங்கிக்கணக்கு குறிவைத்தே மோசடிகள் நடைபெற்று வருவதாகவும்,   விஷமிகள் மோசடி நடவடிக்கைகளுக்கு இத்தகைய வங்கிக்கணக்குகளையே குறி வைக்கிறார்கள். எனவே, வாடிக்கையாளர்களையும், வங்கித்துறையின் நேர்மையையும் பாதுகாக்க இத்தகைய கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளது. வங்கிகளுக்கு தேவையற்ற சுமையை குறைக்கவும், ஆன்லைன் மோசடிக்கான ஆபத்தை குறைக்கவும் இத்தகைய கணக்குகள் மூடப்படுகின்றன.

 மேலும்,  செயல்படாத வங்கிக்கணக்கு. கடந்த 12 மாதங்கள் அல்லது அதற்கு மேல் எந்த பரிமாற்றமும் நடக்காதவை செயல்படாத வங்கிக்கணக்குகள் ஆகும். 12 மாதங்களாக எந்த பரிமாற்றமும் செய்யாத வாடிக்கையாளர்கள், வங்கிக்கிளையை தொடர்புகொண்டு, தங்கள் கணக்கை மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.