கொல்கத்தா: மேற்குவங்க மாநிலதலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் நள்ளிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர் 3 பேர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தா, புர்ராபஜார் மெச்சுவா பழச்சந்தை பகுதியில் அமைந்துள்ள பிரபல ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த ஊழியர் ஒருவர் தப்பிக்க எண்ணி, மேலிருந்து குதித்து இறந்தார். தீ விபத்து அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை அவர்கள் அணைக்கும் பணியில் இறங்கினர். சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அதன் பின்னர் ஹோட்டலில் அவர்கள் சென்று பார்த்த போது உள்ளே, வெவ்வேறு அறைகளில் 14 பேர் பலியானதை கண்டறிந்தனர். ” தீ விபத்தில் ஒரு பெண், ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெண் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்று அந்த அதிகாரி கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொல்கத்தா, போலீஸ் கமிஷனர் மனோஜ் வர்மா, மொத்தம் 14 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர். பலர் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதனிடையே இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு, குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
விசாரணையில், தீ விபத்து நடந்த ஓட்டலில் உள்ள 42 அறைகளில் 88 பேர் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது. இந்தஓட்டலில் நேற்று இரவு 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீஅணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு, இறுதியாக அதிகாலை 3.30 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. எங்கள் தடயவியல் குழு கட்டிடத்தில் விசாரணை நடத்தும். அது சுற்றி வளைக்கப்பட்டுள்ளது,” என்று அதிகாரி கூறினார்.