சென்னை:

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநில பயணிகளிடம் பணம் மற்றும் செல்போன் பறித்த தமிழக சிறப்புக் காவல்படையை சேர்ந்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.

பொதுமக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய காவல்துறையினரே இதுபோன்ற கொள்ளை, அபகரிப்பு சம்பவங் களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஞாயிறன்று இரவு பயணிகள் காத்திருப்பு அறையில் இரவு தங்கியிருந்த வடமாநில பயணிகளிடம் மோபைல்போன், பணம் போன்றவற்றை மிரட்டி பறித்துள்ளனர்  அங்கு இரவு பணியில் இருந்த போலீசார் சிலர்.

இதையறிந்த மற்றொரு பயணி, உடனடியாக ரெயில் காவல்துறையில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், வடமாநில பயணிகளிடம் கொள்ளையடித்த  செய்த ஆசாமிகள் மூவரும் தமிழக சிறப்புக் காவல்படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்துள்ளது.

அவர்கள் பயணிகளிடம் பணம் மற்றும் மொபைலைப் பறித்தது உறுதியானதைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் கைது செய்ய ரயில்வே காவல்துறை ஐஜி பொன்.மாணிக்கவேல் உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட 3 போலீசாரான இருதயராஜ், அருள்ராஜ், ராமலிங்கம் ஆகிய  மூன்று போலீசாரும் புழல் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே, பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.