கோவை:
கோவை பகுதியில் 3 போலீசாருக்கு கொரோனா தொற்று அறிகுறி உறுதியாகி உள்ளது. இதனால், காவலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதிகப்பட்சமாக சென்னையில் 400 பேருக்கும், கோவையில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 3வது இடத்தில் திருப்பூர் உள்ளது அங்க 110 பேருக்கு கொரோனா உள்ளது.
இந்த நிலையில், கோவையில் 3 காவலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கூறி உள்ளர்.
இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், 3 காவலர்களில் 2 பேர் பெண் காவலர்கள் என்றும் அவர்கள், போத்தனூரை சேர்ந்தவர்கள் அவர்கள் 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கோவை போத்தனூர் காவல்நிலையத்தை மூட உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அங்கு பணியாற்றிய காவலர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை கோவைப் பகுதியில் 544 காவலர்களுக்கு கொரோனோ சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இவர்களில் 3 பேர் மட்டுமே சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே 344 காவலர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையின்போது, அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதி பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று 60 காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறினார்.