மனகுளி, கர்னடகா
எட்டு வாக்கு ஒப்புகை இயந்திரங்கள் ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனகுளி என்னும் கிராமத்தில் ஒரு கொட்டகையில் எட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டது. அதை ஒட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருக்ன்றனர். பெட்டிகளில் பேக் செய்யப்பட்ட நிலையில் அந்த வாக்கு ஒப்புகை இயந்திரங்கள் கண்டு பிடிக்கப் பட்டதால் அது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதை ஒட்டி தேர்தல் ஆணைய அலுவலர்கள் அந்த இயந்திரங்களை அங்கு வந்து பரிசோதித்தனர். ஆனால் விவரம் ஏதும் தெரிவிக்கவில்லை. அவர்கள் தாங்கள் கண்டறிந்த விவரங்களை ஆணயத்திடம் மட்டுமே அளிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
துணை தேர்தல் ஆணையர் சஞ்சய், “இந்த வாக்கு ஒப்புகை இயந்திரங்கள் இந்த மாவட்டத்தை செர்ந்தது அல்ல. இந்த மாவட்ட தொகுதிகளுக்க்காக மொத்தம் 2830 இயந்திரங்கள் வந்தன. அவற்றில் 86 பழுது பட்டிருந்ததால் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மீதமுல்ல 2744 இயந்திரங்கள் பத்திரமாக உள்ளன” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த ஹரிந்தர் மற்றும் ராஜேஷ்வர், குஜராத்தை சேர்ந்த சிமன்பாய் படேல் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கும் இந்த வாக்கு ஒப்புகை இயந்திரங்கள் அந்த கொட்டகையில் வைக்கப்பட்டிருந்ததுக்கும் உள்ள சம்மந்தம் பற்றி காவல்துறையினர் எதுவும் தெரிவிக்கவில்லை.