தஞ்சாவூர்: நாடு முழுவதும் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில், தஞ்சையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 பேர் மயக்கமடைந்ததாக தகவல் வெளியானது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 28 நாட்களுக்கு பிறகு 2ம் டோஸ் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கி உள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில், தடுப்பூசி போடப்பட்ட3 முன்கள பணியாளர்கள் திடீரென மயக்கமடைந்தனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மயக்கமடைந்த முன்களப்பணியாளர்களின் உறவினர்கள் கூறும்போது, கொரோனா தடுப்பூசி போடவேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் மருத்துவமனை நிர்வாகம் வலுக்கட்டாயமாகதடுப்பூசி போட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.