சென்னை:
டிடிவி தினகரன் அணியில் இருந்த 3 எம்.பி.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினர்.
அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை அவைத் தலைவர் மதுசூதணன் தலைமையிலான அணிக்கு தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணியே அதிகாரப்பபூர்வ அணியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிமுக ஆட்சி மன்ற குழு கூட்டம் நடந்தது. குழு மாற்றி அமைக்கப்பட்டு 9 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் டிடிவி தினகரன் அணியில் இருந்த எம்.பி. நவநீதகிருஷ்ணன், விஜிலா, புதுச்சேரி எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று சென்னையில் முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்தித்தனர்.
இதன் மூலம் அவர்கள் அணி மாறியிருப்பது உறுதியாகியுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிடிவி தினகரனின் செல்வாக்கு படிப்படியாக குறைய தொடங்கியிருப்பதாக அதிமுக.வினர் தெரிவித்துள்ளனர்.