அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் திங்களன்று நடைபெறும் நிலையில் பக்தர்களுக்கு வழங்க சுமார் 3 லட்சம் லட்டுகள் தயாராக உள்ளது.

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு நாடு முழுவதும் ஜன. 22 அன்று மத்திய அரசு அலுவலகங்கள் பிற்பகல் 2:30 மணிக்குப் பிறகே திறக்கப்பட உள்ளதை அடுத்து அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்து வருகின்றனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வெட்டவெளியிலும் தங்கி இருந்து கும்பாபிஷேகத்தை காண குவிந்துள்ளனர்.

இதனால் பொது சுகாதாரத்தை பேணிக்காக்க உ.பி. மாநில சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதேவேளையில் பக்தர்களுக்கு வழங்க பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரசாத பொருட்கள் வர உள்ளது.

 

ம.பி. மாநிலத்தில் இருந்து 5 லட்சம் லட்டுகள் இரண்டு நாட்களுக்கு முன்னரே தயாராகி வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

 

இதேபோல் சன்டிகரில் 15,000 கிலோ அளவுக்கு சுமார் 3 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி நேற்றே தொடங்கி கனஜோராகா நடந்து வருகிறது.

 

உணவுப்பாதுகாப்புத் துறையினரின் தரபரிசோதனைக்குப் பிறகு இவை பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ராமர் கோயிலை மையமாக வைத்து அயோத்தியில் அதிகரித்து வரும் வியாபாரம்…