சென்னை:  
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள சங்கீதா ஓட்டலில் விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பெரம்பூர் சங்கீதா ஓட்டல்
பெரம்பூர் சங்கீதா ஓட்டல்

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ளது. சங்கீதா ஹோட்டல். இங்குள்ள தண்ணீர்  தொட்டியைச் சுத்தம் செய்த போது விபத்து ஏற்பட்டது.
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய சம்புக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி,  சதீஷ்,    ராமகிருஷ்ணன், வினய் ஆகிய 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பெரம்பூர் பகுதி  தீயணைப்பு வீரர்கள்   மூவரின் உடல்களையும்  மீட்டனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தண்ணீர் தொட்டிக்குள் எப்படி விஷவாயு வந்ததது என்பது  மர்மமாக உள்ளது. இந்த நீரைத்தான் அந்த ஓட்டலில் இதுவரைக்கும் குடிக்க, சமையல் செய்ய  பயன்படுத்தினார்களா? என்பது கேள்விக்குறி. சென்னை மாநகராட்சியும், சென்கனை   குடிநீர் வாரியமும்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.  அநியாயமாக இறந்த  3 பேரின் உயிருக்கு யார் பொறுப்பு?