கோவை: ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளியிலேயே 3 மாணவிகள் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பொள்ளாச்சி அருகே நடைபெற்றுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில் மாணவிகள் பாய் ஃபிரண்ட்ஸ் உடன் பழகியதை பெற்றோரிடம் தெரிவித்து விடுவோம் என்று ஆசிரியர்கள் கண்டித்ததால்,  அவர்கள் தற்கொலை முயற்சி  மேற்கொண்டது தெரிய வந்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் மூன்று பேரை ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது.  இதனால் மனமுடைந்த மாணவிகள் மூன்று பேரும் சாணி பவுடர் கரைசலை குடித்து உள்ளனர்.

இந்த மாணவிகள் மூன்று பேரும் சிறிது நேத்தில் வகுப்பறையில்   வாயில் நுரை தள்ளி மயங்கி விபந்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடடினயாக அவர்களை  அருகே கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில்  அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,  மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் குவிந்தனர். பலர் அங்குள்ள  ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.   மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்  ஆசிரியர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் ஏதாவது தவறு செய்தால் எங்களுக்கு சொல்ல வேண்டியதுதானே அவர்களை கண்டிக்க நீங்கள் யார் என கேள்வி எழுப்பினார். இதனால் ஆசிரியர்கள் மனம் உடைந்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வத்த போலீசார், மாணவிகள் தற்கொலை  முயற்சி குறித்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் பெற்றோர்களிடையும் சமரசம் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பள்ளி மாணவியர், கடந்த, 18ம் தேதி ஆண் நண்பர்களுடன் பேசுவதை கண்ட ஆசிரியர்கள், அவர்களை கண்டித்து, அறிவுரை கூறியுள்ளனர்.  மேலும்,   படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்படும் என  எச்சரித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவகிள் 3 பேரும், தாங்கள் பாய் ஃபிரண்ட்ஸ் உடன் பேசியது குறித்து , பெற்றோரிடம் ஆசிரியர்கள் தெரிவித்து விடுவார்களோ என்ற அச்சத்தில்,  மூன்று பேரும் சேர்ந்து, சாணிப்பவுடரை வாங்கி வந்து, பள்ளி வளாகத்தில் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம்,   தற்கொலைக்கு முயன்ற மாணவியன் பெற்றோர் ஒருவர்,  சப் – கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் , இதுதொடர்பாக  நாங்கள் எங்களது  மகளிடம் விசாரித்த போது, ‘எங்களை ஆசிரியர்கள் மிரட்டியதுடன், உங்களை  எங்கேயும் படிக்க விடாமல் செய்து விடுவோம், எனக்கூறியதால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டோம் என தெரிவித்துள்ளனர், இதனால்,  ஆசிரியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாணவி பெற்றோரின் இந்த புகார், ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.