புதுக்கோட்டை:

3 திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

போலீசாரில் கைது செய்யப்பட்ட  ரகுபதி எம்எல்ஏ புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில்,  கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டையில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட திறப்பு விழா கடந்த 9ந்தேதி நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்டிடத்தை திறந்து வைத்ர்.

இந்த விழாவுக்கு செல்ல முயன்ற அந்த தொகுதி திமுக எம்எல்ஏக்கள் 3 பேரை போலீசார் திடீரென கைது செய்தனர்.

 

திமுக  எம்.எல்.ஏ.க்கள்  புதுக்கோட்டை-பெரியண்ணன் அரசு, திருமயம்-ரகுபதி, ஆலங்குடி-மெய்யநாதன் உள்பட 100 க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டு, பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக செயல்தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், பேசிய ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்களை கைது செய்த போலீசார் மீது வழக்கு தொடரப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில், திருமயம் தொகுதி எம்எல்ஏ ரகுபதி வழக்கு தொடர்ந்துள்ளார்.