ஓக்லஹோமா
அமெரிக்க ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா மாகாணத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் சேவை உள்ளது. நேற்று இரவு இந்த ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் ஒரு நோயாளி சிகிச்சைக்காக வெதர்போர்ட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்த நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு ஹெலிகாப்டர் தளத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்த போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஏர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர். காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel