சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில், 3 நாட்கள் டிரோன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் உள்ளது. இங்கு தொழில்முனைவோர்களை உருவாக்கும்வ வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சில பயிற்சிகள் இலவசமாகவும், சில பயிற்சிகள் குறைந்த கட்டணங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முடித்தவர்கள், தொழில்தொடங்க தமிழ்நாடு அரசு சார்பில் மானியத்துடன் கூடிய கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதன்படி, அவ்வப்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சிகள் உட்பட பல்வேறு தொழிற் பயிற்சிகள், டிரோன் பயிற்சி , பெண்களுக்கு தையல் பயிற்சி, அழகு கலை பயிற்சி என ஏராளமான பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது தொழில்முனைவோர்களுக்கு 3 நாட்கள் டிரோன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. அதன்படி, வரும் 09.09.2025 முதல் 11.09.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில், டிரோன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் விமானம் இயக்கும் அடிப்படைகள் குறித்த கண்ணோட்டம் வழங்கப்படும். மேலும், டிரோன்களின் வகைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள், பராமரிப்பு முறைகள், அவசரநிலைக் கருவிகள். சிமுலேட்டர் பயிற்சி மற்றும் நடைமுறைப் பயிற்சி, அசெம்பிளிங், ப்ளைட் கன்ட்ரோலர் மற்றும் சென்சார் அளவுத்திருத்தம், கண்காணிப்பு மற்றும் மேப்பிங் ஒருங்கிணைப்பு ACT மற்றும் ரேடியோ டெலிபோனிக் போன்ற தொழில்நுட்பங்கள் பயிற்சியில் இடம்பெறும்.
மேலும், அரசு வழங்கும் நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரம் மற்றும் முன்பதிவு செய்ய விரும்புவோர் www.editnin என்ற வலைத்தனத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி, கைபேசி எண்கள். முன்பதிவு அவசியம்: 9543773337 / 9360221280 அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
