நெல்லை:
நெல்லையில் போதையில் தகராறில் ஈடுபட்ட சினிமா விநியோகஸ்தர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலியை சேர்ந்த மணிகண்டன், சொக்கலிங்கம், புதுச்சேரியை சேர்ந்த வெங்கடலாசலம். மூவரும் சினிமா விநியோகஸ்தர்கள். தற்போது சினிமா துறையில் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இதனால் 3 பேரும் நேற்று இரவு குற்றாலம் வந்தனர்.
பின்னர் ஆலங்குளத்தில் இரவில் சாப்பிட்டு விட்டு நடுரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுதாகரனிடமும் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்