டெல்லி: ரோஜ்கர் மேளா திட்டத்திகீழ் 51ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்கா நியமன கடிதங்களை வழங்கிய பிரதமர் மோடி, மேலும், 3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பணி ஆணைக்கான நிகழ்ச்சியான, ரோஸ்கர் மேளாவில் 15வது பணியானை வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 26, 2025 அன்று 51ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணிஆணைகள் வழங்கிய நிலையில், தற்போது 16வது நிகழ்ச்சியில் மேலும் 51ஆயிரம் பேருக்கு (ஜுலை 12ந்தேதி) பணி ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நமது நாடு 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி நகர்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் நாடு ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதுபோன்ற வேலைவாய்ப்பு மேளாக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்காக பங்களித்து வருகின்றனர்.
தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அங்கீகரித்துள்ளது. இந்த திட்டத்துக்காக அரசு பட்ஜெட்டில் ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்.

இன்று இந்தியா 2 வரம்பற்ற சக்திகளைக் கொண்டுள்ளது என்பதை உலகம் ஒப்புக்கொள்கிறது. ஒன்று, நமது மக்கள்தொகை. இரண்டாவது நமது ஜனநாயகம். இளைஞர்களின் பலம் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்துக்கான மிகப் பெரிய சொத்து; மிகப் பெரிய உத்தரவாதம். இந்த சொத்தை செழிப்புக்கான சூத்திரமாக மாற்றுவதில் எங்கள் அரசு தொடர்ந்து பாடுபடுகிறது ” என தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜூலை 12, 2025 அன்று நடைபெற்ற 16வது ரோஜ்கர் மேளாவின் போது, அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
நாடு முழுவதும் 47 இடங்களில் ரோஜ்கர் மேளா நடைபெற்றது, இதன் மூலம் இளைஞர்கள் பல்வேறு மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சேர உதவியது. ரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதி சேவைகள் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் பல துறைகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்கள் சேர்ந்துள்ளனர்.
நாடு முழுவதும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பணியாளர்களை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளது.
“இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும், குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்கும் பிரதமரின் செயல்திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னோடி திட்டமாக இருக்கும் ரோர்கர் மேளா திட்டத்தின்கீழ் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. பிரதமரின் வழிகாட்டுதலின்படி, தற்போதுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் செயல்பட்டு வருகின்றன” என குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்கள், இந்திய அரசின் 38 அமைச்சகங்கள்/துறைகளில் சேர்க்கப்படுகிறார்கள். நியமனம் செய்யப்பட்டவர்கள் அரசின் பல்வேறு குரூப்களில் இணைந்து கொள்வார்கள். குரூப் – ஏ, குரூப் – பி (அரசிதழில் வெளியிடப்பட்டது), குரூப் – பி (அரசிதழில் வெளியிடப்படாது) மற்றும் குரூப் – சி. பணியிடங்களில் மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், உதவி ஆய்வாளர், கான்ஸ்டபிள், எல்டிசி, ஸ்டெனோ, பிஏ, வருமான வரி ஆய்வாளர்கள், எம்.டி.எஸ். போன்றவைகள் இதில் அடங்கும்.
இந்த ஆட்சேர்ப்புகள் மிஷன் முறையில் அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் தாங்களாகவோ அல்லது UPSC, SSC, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்ற ஆட்சேர்ப்பு முகமைகள் மூலமாகவோ ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவான ஆட்சேர்ப்புக்காக, தேர்வு செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டு பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் இவை நடைபெற்றுள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்கும் பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நிறைவேற்று வதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்கும் பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்று பிரதமர் அலவலகம் தெரிவித்துள்ளது.