மண்டி: இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.
மாநிலத்தின் தென்கிழக்கு மண்டிக்கு 13 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 2.07 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவான நிலநடுக்கமானது 76.84 ஆழத்தில் பதிவாகியுள்ளதாக நில அதிர்வு மையம் தமது டிவிட்டரில் பதிவில் அறிவித்துள்ளது.