தமிழகத்தில் 2 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

Must read

சென்னை

ன்று தமிழகத்தில் 2 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது.

கொரோனா 2 ஆம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் தற்போது நிலைமை சீராகி வருகிறது.  விரைவில் 3ஆம் அலை பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதில் ஒன்றாக 18 வயதை தாண்டியோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த 12 ஆம் தேதி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முக்கம் நடந்து கிட்டத்தட்ட 28 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.   ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தை விட இது மிகவும் அதிகமாகும்.  

எனவே இன்று 2ஆம் கட்ட முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.   இன்று கலை முதல் தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட  மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடங்கி உள்ளன.  இன்று கிட்டத்தட்ட 30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடத் தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஆரம்பச் சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 20 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.  இதில் சென்னையில் மட்டும் 1600 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன.

More articles

Latest article