ஏப்ரல்18: தமிழகத்தில் 38 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

Must read

சென்னை:

17வது மக்களவையை அமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் உள்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் மொத்தம்  96  தொகுதிகளில்  நடைபெறுகிறது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் (மார்ச்) 10ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து தேர்தல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 11ந்தேதி முதல் கட்ட வாக்குப்பபதிவு 91 தொகுதிகளில்  நடைபெற்று முடிந்தது.

2வது கட்ட வாக்குப்பதிவு நாளை தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் உள்ள 13 மாநிங்களில் 96 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உள்ள நிலையில், வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 38 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.

அத்துடன் புதுச்சேரி- 1,  அசாம் – 5 தொகுதிகள், பீகார் 5 தொகுதிகள், சத்திஸ்கர் -3 தொகுதி, ஜம்மு காஷ்மீர் – 2 தொகுதிகள், கர்நாடகா – 14 தொகுதிகள், மகாராஷ்டிரா 10  தொகுதிகள், மணிப்பூர் -1 தொகுதி, ஒடிசா – 5 தொகுதி கள், தொகுதிகள், திரிபுரா – 1 தொகுதி, உ.பி. 8 தொகுதிகள்,  மேற்கு வங்கம் – 3 தொகுதிகள் உள்பட மொத்தம் 96 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந் த தேர்தலுடன் தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது.

தேர்தலையொட்டி, நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்யலாம். மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு மேலும் 2 மணி நேரம் கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு இரவு 8 மணி வரை வாக்குப்பபதிவு நடைபெறுகிறது.

தேர்தல் காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவடைந்த பிறகு வாக்கு எண்ணிக்கை மே 23 நடைபெற உள்ளது.

More articles

Latest article