மும்பை,
மகாராஷ்டிராவில் நடைபெற்ற புத்தமத திருவிழாவில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்ஷே மகாராஷ்டிரா பாரதிய ஜனதா அரசு அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இது தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம். அவுரங்காபாத்தில் 2-ம் ஆண்டு சர்வதேச புத்தமத திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மகாராஷ்டிரா பாஜ அரசு அழைப்பின் பேரில், இலங்கை தமிழர்களை கொன்று குவித்த முன்னாள் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்ஷே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருக்கு மகாராஷ்டிரா அரசு வரவேற்பு கொடுத்து கவுரவப்படுத்தியது.
விழாவில் பங்கேற்ற ராஜபக்சே புத்தரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான லோகன் ராத்வாட், உதித் லோகுபந்தாரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கையில் தமிழ் இன அழிப்புக்கு காரணமான ராஜபக்ஷேவை மகாராஷ்டிர பாரதிய ஜனதா அரசு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.