சென்னை:

சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்து ஆலோசனை செய்யும் வகையில்  வரும் 18ந்தேதி  தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னையில் 23 மற்றும் 24ம் தேதி உலக முதலீட்டாளர் மாநாடு நடை பெற உள்ளது. இதையொட்டி அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

(பைல் படம்)

 

முதலவர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 18ம் தேதி நடை பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளளது. இந்த கூட்டத்தில், உலக முதலீட்டாளர்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ள கொடநாடு  கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடிக்கு தொடர்பு இருப்பதாக நேரடி குற்றச்சாட்டுக்கள் வெளியான நிலையில், அது  தொடர்பாகவே இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.