சென்னை:
தமிழகத்தில் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை தொடங்கி வைத்தார்- தொடர்ந்து மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில்தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கிலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளகளை ஈர்க்கும் வகையிலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கண்காட்சிகளுடன் மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில், மத்தய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை வெளியிட்டு உரையாற்றவுள்ளார்.
முதலீட்டாளர்களை வரவேற்கும் பொருட்டு மாநாட்டில் பரத நாட்டியம் உள்பட பல்வேறு கலைகலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், 250க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை மாலை நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு உரையாற்றுகிறார்
இன்றும், நாளையும் ஆகிய 2 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. .
: