சென்னை:

மிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2வது உலக முதலீட்டாளர் மாநாடு ஒப்பந்தங் களின் அடிப்படையில் 7 ஆயிரத்து 175 கோடி ரூபாய் மதிப்பிலான 5 தொழில் திட்டங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

நடப்பாண்டு (2019) ஜனவரி மாதம் 23, 24ந்தேதி உலக முதலீட்டாளர் 2 நாள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், 3 லட்சத்து 441 கோடி ரூபாய் அளவுக்கு 309 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அந்த ஒப்பந்தங்களின் திட்ட தொடக்க விழா தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. .

இந்த விழாவில், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்டபடி நிறுவப்பட்ட 3 ஆலைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உற்பத்தியை தொடங்கி வைத்தார். பின்னர் 15 புதிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அந்த நிறுவனங்கள் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதை அடுத்து டி.சி.எஸ்., ஜெர்மனியின் ஸ்க்விங் ஷெட்டெர் (Schwing shetter), ஜப்பானின் நிஸ்ஸெய் (nissei), கொரியாவின் யங்க்வா (Younghwa), ஜெர்மனியின் மாஹ்லே (mahle) ஆகிய நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

7 ஆயிரத்து 175 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் அமையும் இந்த புதிய தொழில் திட்டங்கள் மூலம், 45 ஆயிரத்து 846 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.