சென்னை:

சென்னையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு தொடங்கப்பட்டது. மாநாட்டின் 2வது நாளான இன்று மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

நேற்றைய மாநாட்டின்போது மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்பேது  அரசு திட்டங்களின் செயல்பாடுகள், சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் பங்கும்பெற்றுள்ள மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டில் முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்து பேசி வருகிறார்.

இந்த மாநாடு,  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவடைந்த மற்றும் நிறைவடையாத அரசு திட்டங்கள், திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள், நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், சட்டம் ஒழுங்கு, பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள், விவசாயக் கடன்கள்,  வறட்சி தண்ணீர் பஞ்சம், நிலத்தடி நீர்வாய்ப்புகள், அணைகள் பராமரிப்பு, சுகாதார நடவடிக்கைககள், தொற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு துறை விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டங்கள் பயனாளிகளை சென்றடைவதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தனியாக ஆலோசனை நடத்தினார்.