இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணி சார்பில் அஷ்வின் 4 விக்கெட்களும், முகமது சிராஜ் 3 விக்கெட்களும், அக்சர் படேல் 2 விக்கெட்களும், ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்துயுள்ளனர்.

இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் முடிவில் இந்திய அணி 263 ரன்கள் அதிகம் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்திய அணியின் முதல் இன்னிங்சில் மயங்க் அகர்வால் 17 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 150 ரன்களை விளாசியதால் 325 ரன்களை எடுத்தது.

நியூஸிலாந்தின் அஜாஸ் பட்டேல் இந்திய அணியின் மொத்த விக்கெட்டையும் சாய்த்து, ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி அஜாஸ் பட்டேலின் சாதனையை முறியடிக்கும் விதமாக 62 ரன்களுக்கு ஆலவுட் ஆனது.