மும்பை

ந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே ஆன டெஸ்ட் மேட்சில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

மும்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே 2ஆம் டெஸ்ட் பந்தயம் நடைபெற்று வருகிறது.   இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.   அதிக பட்சமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த இன்னிங்சில் 10 விக்கட்டுகளையும் நியூசிலாந்து சுழல் பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.   இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜாஸ் படேல் ஒரே இன்னிங்சில் 10 விக்கட்டுகளை எடுத்த மூன்றாம் வீரர் ஆவார்,  இவருக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இங்கிலாந்து வீரர் ஜிம் லேகர் மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோர் ஒரே இன்னிங்சில் 10 விக்கட்டுகள் எடுத்து சாதனை  புரிந்துள்ளனர்.  அவ்வரிசையில் மூன்றாவதாக அஜாஸ் படேல் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.