சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நினைவூட்டும் 2ஜி தீர்ப்பு: ராமதாஸ்

Must read

சென்னை,

2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு சர்க்காரியா ஆணைய அறிக்கையை நினைவூட்டுகிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஊழலில் இருந்து திமுகவை சேர்ந்த ராஜா, கனிமொழி உள்பட அனைவரையும் விடுதலை செய்துள்ள டில்லி சிபிஐ நீதி மன்றம்.

இந்நிலையில் தீர்ப்பை திமுக, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வரும் வேளையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது,

2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு சர்க்காரியா ஆணைய அறிக்கையை நினைவூட்டுகிறது. இந்த வழக்கில் டில்லி தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு, மத்திய புலனாய்வுப் பிரிவும் மேல்முறையீடு செய்து நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

மேலும், ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது…  ஆனால், அதை நிரூபிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான அடிப்படையில் செய்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அநீதியும், ஊழலும் இப்போது வென்றிருக்கிறது. ஆனால், எல்லா நாளும் வெல்ல முடியாது என்று கூறி உள்ள ராமதாஸ்,

”திமுக தலைவர்களின் ஊழல் மற்றும் முறைகேடுகள் உண்மை… ஆனால், அதை நிரூபிக்க முடியாத அளவுக்கு மிகவும் தந்திரமாக செய்துள்ளனர் என்று சர்க்காரியா ஆணையம் கூறியிருந்தது. இப்போதும் அது தான் நடந்திருக்கிறது.”

இவ்வாறு ராமதாஸ் கூறி உள்ளார்.

More articles

Latest article