ரபாட்
இன்று அதிகாலை மொரோக்காவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 151 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
மொரோக்கா நாட்டில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கம் அதிகாலை 3.14 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகி உள்ளது,.
இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.
இந்த நில நடுக்கத்தால் 151 பேர் மரணம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இங்குள்ள கட்டிட இடிபாடுகளில் ஏராளமான மக்கள் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.