சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மத்திய பாதுகாப்புத்துறை கீழ்நிலை பணிக்கான ‘குரூப் C’ தேர்வில், புளூடூத் மூலமும் காப்பி அடித்ததாக,  29வட மாநில இளைஞர்கள் கைது பிடிபட்டனர் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதுகாப்புத்துறை கீழ்நிலை பணிக்கான ‘குரூப் C’ தேர்வு நேற்று நடைபெற்றது. கிண்டி நந்தம்பாக்கத்தில் உள்ள  ராணுவப் பள்ளியில்  குரூப் – சி தேர்வு நடைபெற்றது. நடைபெற்ற தேர்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில், புளூடூத் மூலமும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய அரியானா மாநிலத்தைச் சேர்ந்த  29 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள்மீது தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. [

மத்தியஅரசு தேர்வுகளில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெறுவதும், அவர்களுக்கு தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் பணி வழங்கப்படுவதும் சர்ச்சையாகி வருகிறது. இதுபோன்ற தேர்வுகள் நேர்மையாக நடத்தப்படுவதில்லை என்று குற்றச்சட்டும் உள்ளது. அண்மைக் காலமாக தொழிற்நுட்ப உதவியுடன் மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் வடமாநில இளைஞர்கள் காப்பியடித்து சிக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாதுகாப்புத் துறை சார்பாக நடத்தப்பட்ட தேர்வில், அதுவும் சென்னையில் நடத்தப்பட்ட தேர்வில், வடமாநில இளைஞர்கள் புளூடூத் மூலம் காப்பியடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்வில் மொத்தமாக 1,728 நபர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். அதேபோல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும் தேர்வை எழுதினர். இந்த தேர்வில் கலந்துகொண்ட அரியான மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்  29 பேர் சிறிய அளவிலான புளூடூத் கருவியின் உதவியுடன் தேர்வு மையத்துக்கு வெளியே இருக்கும் நபர்களின் உதவியுடன் விடைகளை எழுதியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மாணவர்களில் சிலர் ஆள் மாறாட்டம் செய்ததும் தெரிய வந்துள்ளது.

இதை கண்டுபிடித்த ஆசிரியர்கள், அவர்களை தேர்வு அறையைவிட்டு வெளியேற்றியதுடன், இதுதொடர்பாக  நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் பயன்படுத்திய புளூடூத் கருவிகளை பறிமுதல் செய்து, 29 பேரை கைது செய்தனர்.

இந்த மாணவர்கள் உபயோகப்படுத்திய புளுடூத் கருவி, மிகச்சிறிய அளவிலானது என்று கூறிய காவல்துறையினர், இதை காதின் உள்ளே செருகிக்கொண்டால், அதை எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறினர்.