தோடோமா:
தான்சானியா நாட்டில் அரூஷா என்ற பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று கரட்டு என்ற பகுதி அருகே வந்தது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் பள்ளி மாணவ மாணவிகள் 29 பேர் பலியாகினர். மொத்தம் 34 பேர் இறந்தனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து மரங்களுக்கு இடையே சிக்கி கொண்டுள்ள நிலையில் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]