ப்ரான்ஸின் இளம் அதிபரானார் மெக்ரான்!

Must read

French election: Emmanuel Macron wins presidency by decisive margin

 

பிரான்ஸின் புதிய அதிபராக  இமானுவேல் மெக்ரான்(39) தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் பிரான்ஸ்  நாட்டின் 24வது அதிபராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

.
பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே பதவிக்காலம் முடிவதால் அடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரான்காயில் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவேல் மெக்ரான் மற்றும் இடது சாரி சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 23ம் தேதி நடைபெற்றது.

இதில் குறைந்த வாக்குகள் பெற்ற பிரான்காயில் பில்லன் தேர்தலில் இருந்து விலகிக்கொண்டார்.  முதல்கட்ட வாக்குப்பதிவில் 23.7 சதவீதம் வாக்குகளை பெற்ற வலதுசாரி தலைவரும், பெண் வேட்பாளருமான மரின் லீ பென் மற்றும்  21.7 சதவீதம் வாக்கு பெற்ற இமானுவேல் மக்ரான் ஆகியோர்  இரண்டாவது கட்ட தேர்தலில் போட்டியிட்டனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. புதுச்சேரியில் பிரான்ஸ் துணை தூதரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற சுமார் 4,600 பேர்  வசித்து வருகின்றனர். பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்காக, அங்குள்ள தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 6 வாக்குசாவடியில் இவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். காரைக்கால், சென்னையிலும் ஏராளமான பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்தனர்.

ஏப்.,23ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் மெக்ரான் 23.9% ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். லி பென் 21.4% ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். இந்நிலையில் நேற்று(மே 7) நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 65.3 சதவீத ஓட்டுகள் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். மெரைன் லி பென்னுக்கு 34.7 சதவீத வாக்குகளே கிடைத்தன. வெற்றி பெற்றதன் மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் எனும் பெயர் மெக்ரானுக்கு கிடைத்துள்ளது.

முந்தைய அதிபரான ஹொலந்தேவால் பொருளாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த மெக்ரான், இதற்கு முன்னர் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டவரல்ல. மெக்ரானின் வெற்றிக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள ஹொலந்தே, இதன் மூலம் பிரான்ஸ் உலகத்திற்காக கதவுகளைத் திறந்து வைத்திருக்கும் தாராளமய தேசமாக இருப்பதற்கு மக்கள் ஆதரவளித்திருப்பதாக கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய மெக்ரான், தான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடப்போவதாக கூறினார்.

 

More articles

Latest article