ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை புரட்டிப்போட்டு, பொருளாதாரத்தையே முடக்கி உள்ளது. இன்று (ஆகஸ்டு 29) காலை 6மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் விவரம் வெளியாகி உள்ளது.
தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 24,898,959 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், தொற்றுபாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 17,290,153 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 840,661 ஆக அதிகரித்து உள்ளது.
உலகிலேயே கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,096,235 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 185,901 ஆக உள்ளது. இதுவரை 3,375,838 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,534,496
2வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு இருந்து வருகிறது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,812,605 ஆகவும், இதுவரை 119,594 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 2,976,796 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 716,215ஆக உள்ளது
3வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது. இந்தியாவில், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,461,240 ஆக உள்ளது. இதுவரை 62,713 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,647,538 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 750,98 ஆக உள்ளது.