ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உ 18.21கோடியாகவும், குணமடைந்தோர் 16.67 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. தற்போது உருமாறிய வகையில், தனது வீரியத்தை காட்டி, லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்த நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 182,183,793 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 166,739,303 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3,945,184 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.