சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நேற்று (28.6.20)ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி யானதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எணிண்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல பலி எண்ணிக்கையு, 1,079 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி உள்பட 6 மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் சென்னை, மதுரையிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 3,715 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 5,051 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,644 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2,326 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று புதிதாக மேலும் 202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 5,253. மேலும் செங்கல்பட்டில் இதுவரை கொரோனா பாதித்த 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி
தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 464-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம்
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 801-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. குறிப்பாக விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 34 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் 22 பேர் விருதுநகர் நகர்ப்பகுதியைச் சேர்ந்தவர்கள். இதனால் விருதுநகரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 175 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.