சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 24,418 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிக பட்சமாக சென்னையில்  4508 வழக்குகள் பதிவாகி உள்ளன.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று மட்டும், 1,31,684 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,14,87,264*** சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.

இன்று ஒரே நாளில் புதிதாக 24,418 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,02,702ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் 46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,506  ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில், 27,885 நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் 2,08,350பேர் சிகிச்சையில் உள்ளனர். தலைநகர் சென்னையில் இன்று மேலும் 4508 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று மேலும் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 7687 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 38,799 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில்  கொரோனா பாதிப்பு: 

தமிழ்நாட்டில் அதிகபட்ச பாதிப்பு சென்னையில் பதிவாகி உள்ளது. அங்கு 4508  பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கோவையில் 3309 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1614 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 10,559 தெருக்களில் கொரோனா நோயாளிகள் உள்ளனர் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 6,962 தெருக்களில் 3க்கும் குறைவான கொரோனா நோயாளிகளும், 1,745  தெருக்களில் 5க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகளும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர்125
செங்கல்பட்டு1614
சென்னை4508
கோவை 3309
கடலூர்347
தர்மபுரி305
திண்டுக்கல்214
ஈரோடு1198
கள்ளக்குறிச்சி240
காஞ்சிபுரம்512
கன்னியாகுமரி866
கரூர்217
கிருஷ்ணகிரி665
மதுரை483
மயிலாடுதுறை108
நாகப்பட்டினம்196
நாமக்கல்601
நீலகிரி236
பெரம்பலூர்59
புதுக்கோட்டை200
ராமநாதபுரம்133
ராணிப்பேட்டை388
சேலம்1264
சிவகங்கை 116
தென்காசி 283
தஞ்சாவூர் 625
தேனி220
திருப்பத்தூர்230
திருவள்ளூர்640
திருவண்ணாமலை475
திருவாரூர்277
தூத்துக்குடி 246
திருநெல்வேலி 436
திருப்பூர் 1649
திருச்சி574
வேலூர் 115
விழுப்புரம் 377
விருதுநகர்363