சென்னை: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 3971 தனியார் பள்ளிகளில் 28271 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் RTE ஒதுக்கீட்டின் கீழ் EMIS தளத்தில் இணைக்கப்படுவர். இதன் மூலம் 2025–26 கல்வியாண்டிற்கான பெயர் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு 71 ஆயிரத்து 398 மாணவர்கள் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில் நடப்பாண்டில் 7717 பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 2025–26 கல்வியாண்டிற்காக 7717 பள்ளிகள் LKG வகுப்பில் 81927 மாணவர்களும், முதல் வகுப்பில் 99 மாணவர்கள் RTE 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு விண்ணப்பித்தனர்.

அதன் அடிப்படையில் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்குள் விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று (அக்டோபர் 30ம் தேதி) சேர்க்கை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தாெடர்ந்து அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பம் செய்திருந்த 3746 தனியார் பள்ளிகளில் உள்ள 42079 இடங்களுக்கு இன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் RTE ஒதுக்கீட்டின் கீழ் EMIS தளத்தில் இணைக்கப்படுவர். இதன் மூலம் 2025–26 கல்வியாண்டிற்கான பெயர் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை முதன்மைச்செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘2025-26ம் கல்வியாண்டில் 4074 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் 28 ஆயிரத்து 77 மாணவர்கள், முதல் வகுப்பில் 5 மாணவர்கள், 3654 மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் 42 ஆயிரத்து 273 மாணவர்கள், முதல் வகுப்பில் 94 மாணவர்கள் என்று 7717 பள்ளிகளில் 70 ஆயிரத்து 449 பேர் சேர்ந்துள்ளனர்.

அதேப்போல் 2020-21ம் ஆண்டில் 8613 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் 69 ஆயிரத்து 130 மாணவர்கள், முதல் வகுப்பில் 95 பேர், 2021-22 ஆம் ஆண்டில் 7762 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் 55 ஆயிரத்து 577 மாணவர்கள், முதல் வகுப்பில் 94 பேர் , 2022-23 ம் ஆண்டில் 7769 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் 65ஆயிரத்து 946 மாணவர்கள், முதல் வகுப்பில் 96 பேர், 2023-24 ம் ஆண்டில் 7549 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் 69 ஆயிரத்து 842 மாணவர்கள், முதல் வகுப்பில் 94 பேர், 2024-25 ம் ஆண்டில் 7609 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் 71 ஆயிரத்து 306 மாணவர்கள், முதல் வகுப்பில் 92 பேர் சேர்ந்துள்ளனர்” என பள்ளிக்கல்வி துறை முதன்மைச்செயலாளர் சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் சேருவதற்கு அந்த பள்ளியில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு கூடுதலாக விண்ணப்பிக்க மாணவர்களை தேர்வு செய்வதற்கான குலுக்கள் இன்று நடைபெற்றது. பெற்றோர்களின் முன்னிலையில் நடைபெற்ற குலுக்களில் விதிகளின்படி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 3971 தனியார் பள்ளிகளில் 28271 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.